Tuesday, July 5, 2011

உணர்கிறேன்!

நான் பாடிய முதல் ராகத்தை கேட்க குடுத்து வைத்தவள் என் அம்மா !!
அவள் பாடிய "ஆராரோ "க்கு ஆ.... ஆ... ன்னு அசராமல் சுருதி சேர்த்த என்னை அணைத்து..... அச்சாக இச்சு வைத்தவள் என் அம்மா !!

நான் முறித்த சோம்பலின் வலியை அறிந்து ஒத்தை கையால் பாதம் வரை பிடித்து விட்டவள்.....
என் மூச்சில் அவள் பொறுப்பை உணர்ந்தவள் ... பார்வையிலேயே என் தேவை புரிந்தவள் !

அன்று அவள் சுண்டு விரலை பிடித்து கொண்டு முந்தானையோடு விளையாடிக்கொண்டே கடைத்தெருவுக்கும் கோவிலுக்கும் செல்லத்தான் எத்தனை ஆவல் எனக்கு!!

கோவமாய் முறைத்தாலும்... முதுகுலேயே தட்டினாலும் ... ஆசையா சாப்பாடு பெசஞ்சி "ஆ.. காட்டு " ன்னு சொல்லும்போது.... 'அடடா'ன்னு இருக்குமே!~~

ஊர் முழுக்க சுத்தி கன்னா பின்னா ன்னு ஆட்டம் போடறதுல எனக்கே உரிய தோழி , என்அம்மா....

"உழைச்சா தான் உருப்பட முடியும் "ன்னு எனக்கு புரிய வைத்தவள்!

நானும் இன்று பலமாக உழைக்கிறேன்! எனக்காக!
என் அம்மாவும் எனக்கு மேல் உழைக்கிறாள்! அதுவும் எனக்காக!
வாழ்க்கையில் நான் ஜெயிக்கணும் ன்னு யோசிக்கிறாளே!

அம்மாக்கு தெரியல... நான் என்னிக்கோ ஜெயிச்சுட்டேன்!
"என்னிக்கு ஒனக்கு பொறந்தேனோ! என்னிக்கு ஒன்ன அம்மா ன்னு கூப்பிட்டேனோ ! அன்னிக்கே நான் ஜெயிச்சுட்டேன் மா!!"

No comments:

Post a Comment