Monday, April 9, 2012

பாறையாய் இருக்கும் நீ பாழாக பிறந்தவளோ? 

கலைஞனின் கைப்பட காயங்கள் உறுதியாக 
கள்வனின் கை தவறிய தங்கமாய்  உருளாதே

கொதிக்கும் சூழலில் குளிரும் நினைவுகளுள் 
 உளியின் முனைக்கு இன்று நீ சமர்ப்பணம் 

கானலான காதலியின் கூந்தல் மணம் நினைவில் வர 
தனை மறந்து உள் அழகை உன் இடையில் வைத்தானே! 
நாளாக... நேரம் வீணாக...
அவன் இச்சைக்கு நீ ஆளாக 
கண்ணுக்கு உயிரளித்து கண்ணாலே  கற்ப்பழித்தானே!